RSS

போர்க் காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு உதவி

22 Jun

இறுதிக்கட்ட யுத்தம் வரை செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு சேவையாற்றி உயிரிழந்த, காணாமல்போன, மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்களுக்கு கொழும்பில் இருந்து செயற்படும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நிதியுதவி வழங்கியுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் உள்ள சிவராம் ஞாபகார்த்த மன்றத்தின் உதவியுடன் இந்த உதவி வழங்கப்பட்டது.

ஒன்றியத்தின் தலைவர் இ.பாரதி, உப தலைவர் அ.நிக்ஸன், ஒன்றிய உறுப்பினர் துஷ்யந்தி கனகசபாபதிப்பிள்ளை ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாவை
யாழ்ப்பாணத்தில் வைத்து வழங்கினர்.

எதிர்காலத்தில் இவ்வாறான உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கும் அவர்களுக்கு ஏற்ற தொழில்களை பெற்று கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியத்தின் தலைவர் பாரதி தெரிவித்தார்.

யுத்தத்தினால் கிழக்கு மாகாணத்திலும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என்றும் அவர்; மேலும் குறிப்பிட்டார்.

சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மனின் தாயாருக்கு கொழும்பு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் உதவியுடன் 20ஆயிரம் ரூபாவை இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கடந்த ஏப்ரல்மாதம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Leave a comment

Posted by on June 22, 2011 in செய்திகள்

 

Leave a comment